ETV Bharat / state

புளியந்தோப்பு கேபி பார்க் லிப்ட் பழுதால் முதியவர் உயிரிழப்பு! - KP Park Lift accident - KP PARK LIFT ACCIDENT

KP Park Lift accident: சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் லிப்ட் பழுதானதால் கீழே இறங்க முடியாமல் முதியவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

KP Park
கேபி பார்க் குடியிருப்பு மற்றும் உயிரிழந்த முதியவர் கணேசன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 10:14 PM IST

சென்னை: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் ஜி பிளாக் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு வயது 55. இவர் தனது மனைவி மலர் இருவரும் டிபன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சங்கீதா, சதீஷ்குமார் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் கணேசன் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு ஜி பிளாக்கில் உள்ள பத்தாவது மாடிக்குச் செல்வதற்காக லிப்ட்டில் சென்றுள்ளார். அப்போது ஏழாவது மாடியில் லிப்ட் பழுதாகி நின்றுள்ளது. எனவே, உடனடியாக வாட்ச்மேன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் மேலே சென்றுள்ளனர்.

அதற்குள் கணேசன் கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, அவர் கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு முறையாக பராமரிக்காமல் இருந்ததே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், லிப்ட் முறையாக இயங்கவில்லை என்றும், அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாகவும் அடுக்குமாடி குடியிருப்பை அரசு முறையாக பராமரிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குடும்பம்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.