ETV Bharat / opinion

திபெத் மீதான அமெரிக்காவின் அக்கறை இந்திய - சீன உறவை பாதிக்குமா? - china tibet issue us resolution

author img

By J K Tripathi

Published : Jun 27, 2024, 12:37 PM IST

நீண்டகாலமாக நீடித்துவரும் சீனா- திபெத் பிரச்னை தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற இருஅவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமும், அதன் தொடர்ச்சியாக அமெரிக்க எம்.பி.க்கள் குழு, தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவை சமீபத்தில் சந்தித்து பேசியதும் சர்வதேச அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்க தலைவர்கள் தலாய் லாமாவை சந்தித்த புகைப்படம்
அமெரிக்க தலைவர்கள் தலாய் லாமாவை சந்தித்த புகைப்படம் (Credits - ANI)

ஹைதராபாத்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவருமான மைக்கேல் மெக்கால் தலைமையிலான ஏழு பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு, புத்த துறவியான தலாய் லாமாவை சந்தித்ததுதான் சர்வதேச அரசியலில் சமீபத்திய பேசுபொருள் எனலாம்.

ஆளும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான மைக்கேல் மெக்கால் தலைமையிலான இக்குழுவில், குடியரசுக் கட்சியின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியும் இடம்பெற்றிருந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள தலாய் லாமாவை ஜூன் 19 ஆம் தேதி இக்குழுவினர் சந்தித்துப் பேசினர். தலாய் வாமாவை சந்திப்பதற்கு முன் இக்குழு, நாடு கடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசாங்க பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியது. சீனா - திபெத் இடையே நீண்டகாலமாக நீடித்துவரும் பிரச்னைக்கு தீர்வுகாணும் நோக்கில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் கடந்த ஜுன் 12 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்க எம்.பி.க்கள் குழு தலாய்லாமாவை சந்தித்தது.

தீர்மானம் சொல்வதென்ன?: திபெத் மீதான சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை கண்டித்துள்ள அமெரிக்க செனட் தீர்மானம், சீனாவுக்கு எதிரான திபெத்தியரின் போராட்டத்துக்கு துணை நிற்கும் என்றும் உறுதி அளிக்கிறது. அத்துடன் திபெத்தின் தனிப்பட்ட வரலாறு, கலாச்சாரம், மதம் மற்றும் மொழியியல் அடையாளத்தையும்,. திபெத்தின் பன்முக சமூக-கலாச்சார அடையாளத்தையும் காணாமல் போகச் செய்யும் சீனாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதற்கு தேவையான நிதியை திபெத்தியர்கள் பெறுவதையும் அமெரிக்க தீர்மானம் ஊக்குவிக்கிறது. மொத்தத்தில் திபெத்தின் வரலாறு குறித்த சீனாவின் திரிபுகளில் இருந்து, அதன் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க அந்நாட்டு மக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தலாய்லாமாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என இத்தீர்மானம் உறுதி அளிக்கிறது.

வெற்றுக் காகிதம் என சீனா விமர்சனம்: தலாய் லாமா உடனான அமெரிக்க பிரதிநிதிகளின் இச்சந்திப்பு சீனாவை கடும் கோபமடைய செய்யும் என்பதை சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததுதான். இந்த எதிர்பார்ப்புக்கு இணங்கவே, சீன அரசு நாளிதழான 'குளேபல் டைம்ஸ்' ஜுன் 20 ஆம் தேதி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், திபெத் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஓர் வெற்றுக் காகிதம் என்றும், முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது எனவும் அக்கட்டுரையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று குறிப்பிட்டிருந்த சீன நாளேடு, இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர் சர்வதேச சமூகத்தால் மேன்மேலும் புறக்கணிப்பட்டுள்ளார்; உண்மையில் அவர் ஒரு ஆன்மிகவாதியே அல்ல எனவும் சாடியிருந்தது. பூர்வீக அமெரிக்கர்களுக்கு கடந்த காலங்களில் நேர்ந்த கொடுமைகளை மறந்துவிட்டு, திபெத் குறித்து பொறுப்பற்ற முறையில் கருத்துகளை சொல்வதா? என்று நான்சி பெலோசி உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகளையும் குளோபல் டைம்ஸ் கட்டுரை கடிந்து கொண்டிருந்தது.

திபெத்திய குழந்தைகளுக்கு கம்யூனிசம் போதித்த சீனா: 1950 இல், கம்யூனிச சீன அரசு திபெத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து கொண்டபின், அப்பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்கள் தொடங்கியன. முக்கியமாக, ஆக்கிரமிப்பு திபெத்திய பகுதிகளில் சீனாவின் ஹன் இனமக்களை அதிகமாக குடியமர்த்தியதன் மூலம் திபெத்தின் அடையாளத்தை அழிக்க தொடங்கியது. அத்துடன் அந்த காலகட்டத்தில் திபெத்திய குழந்தைகள், சிறுவயதிலேயே அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு உண்டு உறைவிடப் பளளிகளில் சேர்க்கப்பட்டு, கம்யூனிச சித்தாந்தம் குறித்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டதாக உறுதியாக நம்பப்படுகிறது. திபெத்திய மாணவர்களை அவர்களின் பாரம்பரிய, கலாச்சாரத்தில் இருந்து மிகவும் கவனமாக பிரித்த சீன அரசு, அவர்களுக்கு மாண்டரின் கம்யூனிச சித்தாந்தங்களை போதித்தது.

இந்த நிலையில், கதுன் கோக்கி நைமா எனும் ஆறு வயது சிறுவனை 11-வது பஞ்சன் லாமாவாக 1995 இல் தலாய் லாமா அறிவித்தார். திபெத்திய பாரம்பரிய முறைப்படி, தமக்கு அடுத்த இரண்டாவது பெரிய ஆன்மீக நபராக நைமாவை தலாய் லாமா இதன் மூலம் அங்கீகரித்தார். இந்த அறிவிப்பு வெளியான இரண்டே நாட்களில் சிறுவன் கதுன் கோக்கி நைமா சீனப் படைகளால் கடத்தப்பட்டார். இதுநாள்வரை அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில், சியான் கெய்ன் நோர்பு என்பவரை நைமாவின் இடத்துக்கு சீனா நியமித்தது. அவரது நியமனத்தை தலாய் லாமா வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், தற்போதைய பஞ்சன் லாமாவும் சீனாவின் பிரதிநிதியாக உள்ளதாகவே தெரிகிறது.

திபெத்தின் மீது சீனாவுக்கு ஏன் இவ்வளவு ஆசை?: திபெத்திய பீடபூமி பகுதிகள் நிலக்கரி, தாமிரம், குரோமியம், லித்தியம், துத்தநாகம், ஈயம் என அபரிமிதமான கனிம வளங்களை கொண்டுள்ளன. இதன் காரணமாகவே இப்பகுதிகளில் தமது ஆளுமையை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது. இப்பகுதிகளில் சீனாவால் மேற்கொள்ளப்பட்டுவரும் உள்கட்டமைப்பு பணிகள், தொழில்மயமாக்கல் மற்றும் அவசர கதியில் கட்டப்படும் சுரங்கங்கள் இப்பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடி வந்தாலும் இதுநாள்வரை அதற்கு பலனில்லை. அத்துடன், திபெத்தின் பரந்துவிரிந்த நீர் வளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் அண்டை நாடுகளை வெல்ல சீனா விரும்புகிறது.

திபெத் மீதான அமெரிக்காவின் ஆர்வம்: அதேசமயம், திபெத் மீதான அமெரிக்காவின் ஆர்வம் ஒன்றும் புதிதல்ல. 1950 இல் தொடங்கி 1971 வரை, திபெத்திய பிரச்னையை முன்வைத்து அமெரிக்கா வகுத்த கொள்கை முடிவுகள் கம்யூனிச சீன அரசை சாத்தியமான அனைத்து வழிகளிலும் நெருக்கடி அளிக்கும் விதத்தில் இருந்தன. ஆனால் அதன்பிறகு கம்யூனிச சீனா, தாராளமய பொருளாதார கொள்கையை அனுமதித்தது, அங்கு அமெரிக்காவுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளுக்கான கதவுகளை திறந்துவிட்டது. இதன் காரணமாக 1970 களில் தொடங்கி 2000 வரை, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக திபெத் விவகாரத்தில் அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், 2001 தொடங்கி இதுநாள்வரை கிட்டத்தட்ட கடந்த கால் நூற்றாண்டில், திபெத் விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் ஜூன் 12 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட அமெரிக்க நாடாளுமன்றத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த 2002 இல் நிறைவேற்ற முதல் கீர்மானம், சீன அரசால் திபெத்தியர்கள் தவறாக நடத்தப்படுவதை கோடிட்டு காட்டியது. அத்துடன், சீனாவுக்குள் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக திபெத்தை அந்த தீர்மானம் அங்கீகரித்தது. திபெத் விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்றாவது தீர்மானம், அமெரிக்க அதிபரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. திபெத்தின் வரலாற்று குறித்த தவறான தகவல்களை பரப்பும் சீனாவின் முயற்சியை முறியடிப்பதற்கு தேவையான நிதியை திபெத்தியர்களுக்கு வழங்குவதை இத்தீர்மானம் ஊக்குவிக்கிறது. மேலும், சீனா - திபெத் இடையே நீடித்துவரும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில், தலாய் லாமாவுடனோ அல்லது அவரது பிரதிநிதிகளுடனோ நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த சீனா முன்வர வேண்டும் எனவும் இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

திபெத்தியர்களின் தனிமனித மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக சீனா இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, திபெத்தியர்களின் மனித உரிமைகளை காக்கும்படியாக சீனா நடந்து கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிநாதமாக உள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு இடையே, 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசு தலாய் லாமாவுக்கு அளிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம், அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக தலாய் லாமா அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது அவர் அமெரிக்க அரசு உயரதிகாரிகளை சந்திக்க உள்ளார் எனவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கூட சந்தித்து பேசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்த அமெரிக்க உயர்நிலைக் குழு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசியது. அப்போது இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை அவர்கள் மோடியிடம் எடுத்துரைத்தனர். இந்தியாவை பொறுத்தவரை, நாம் 1950 முதல் திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளோம். ஆனால் அதேசமயம் இந்தப் பிராந்தியத்துக்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதற்கு ஆதரவாகவும் உள்ளோம். ஆனால் மறுபுறம், அருணாசலப் பிரதேசம் தமக்கு சொந்தமானது என உரிமை கோரிவரும் சீனா, இப்பகுதிக்கு இந்திய தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கவும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

தென்சீன கடல் பரப்பில் நிலவும் பதற்றம், உக்ரைன் மற்றும் பாலஸ்தீன போர் போன்றவற்றில் சீனா தற்போது கவனம் செலுத்தி வருவதால், திபெத் பிரச்னையில் எந்தவொரு தீவிரமான நடவடிக்கையையும் எடுக்காது என்றே தெரிகிறது. ஆனால் இப்பிரச்னையை சீனா உயிர்ப்புடனே வைத்திருக்கும். எனவே, திபெத்திய மக்களின் உரிமைகளை காப்பதற்கான நடவடிக்கைகளை, ஜோ பைடன் தலைமையிலான தற்போதைய அமெரிக்க அரசும் தொடர்நது மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: மேற்கு உலகின் பிம்பங்களா ஜி7, ஜி20 அமைப்புகள்? ஆசிய நாடுகளுக்கு இதில் என்ன பயன்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.