ETV Bharat / opinion

நவீன ஊடக உலகின் பிதாமகன்.. ராமோஜி ராவ் கடந்து வந்த பாதை! - Ramoji Rao Passes away - RAMOJI RAO PASSES AWAY

Ramoji Rao History: நவீன ஊடக சாம்ராஜ்யத்தின் பிதாமகனாக அறியப்படும் பத்ம விபூஷண் ராமோஜி ராவ் தனது 87 வது வயதில் காலமானார். இதழியல் மட்டுமின்றி சினிமா, மொழியியல், அரசியல், வர்த்தகம் என பன்முகங்களைக் கொண்ட ராமோஜி ராவ் நேர்மை , நன்னெறி சார்ந்த செயல்பாடுகளுக்கு தனது வாழ்வையே உதாரணமாக்கிக் கொண்டுள்ளார்.

ராமோஜி ராவ்
ராமோஜி ராவ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 1:37 PM IST

Updated : Jun 8, 2024, 1:42 PM IST

ஹைதராபாத்: ராமோஜி ராவ் இந்த பெயரில் ஒரு வீரியம், புத்தாக்கம் , அர்ப்பணிப்பு உள்ளிட்ட குணங்கள் தொனிக்கின்றன. இவரது பரந்த பயணத்தில் சவால்கள் என்பவை வெறும் தடைக்கற்களல்ல, இவராகவே விரும்பி ஏற்றுக் கொண்ட சாகசங்கள். இந்த ஒவ்வொரு சாகச தருணங்களையும் புத்தாக்க படைப்பு, மாற்றங்களை புகுத்துவது என பயன்படுத்திக் கொண்டவர். தான் வழிநடந்த பவ்வேறு துறைகளிலும், சமரசமில்லாத பொறுப்புணர்வுடன், குழுவாக செயல்படுவதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு படைப்புலகின் பல்வேறு பக்கங்களையும் ஆய்ந்தறிந்தவர்.

இவரது இடையறாத முயற்சியின் காரணமாக தெலுங்கு பத்திரிகை உலகம், சாமானிய மக்களுக்கு புரியும் வகையிலான மொழியாக்கத்தை கையிலெடுக்கத் துவங்கியது. தெலுங்கு பேசும் மக்களுக்கு ராமோஜி ராவ் என்ற பெயர் உத்வேகமூட்டக் கூடியதாக உள்ளது. இவரது தொலைநோக்குப் பார்வை இதழியல் என்பதைத் தாண்டியும் இலக்குகளைக் கொண்டது. தெலுங்கு மொழியின் தொன்மையை பாதுகாத்து பரப்ப வேண்டும் என்ற நோக்கம் இவருக்கு இருந்தது. ஆங்கிலத்தின் தாக்கத்தை உணரத் தொடங்கிய நேரத்தில் தெலுங்கு மொழியின் தூய்மைக்கு பாதுகாவலராக விளங்கியவர் ராமோஜி ராவ். அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என இரண்டிலுமே அவர் எடுத்த முன்னெடுப்புகள் தெலுங்கு மொழியின் அடையாளத்தையும் பெருமையையும் மீட்டெடுப்பதாக அமைந்தன.

ராமோஜி அறக்கட்டளை அவரது பொறுப்புணர்வுக்கு ஒரு உதாரணமாக நின்று , மொழியியல் மற்றும் கலாச்சார புத்தாக்கத்திற்கு களமாக அமைந்தது. "தெலுகு வெலுகு" (தெலுங்கு வாழ்க) என்பது போன்ற முன்னெடுப்புகள் மூலம் மொழி ஆர்வலர்கள் மத்தியில் தெலுங்கு இலக்கியத்திற்கான ஆர்வத்தீயை பற்ற வைத்தார். " ஒரு நாட்டின் உயிரே மொழிதான்" என்ற அவரது தீர்மானமான முடிவு, எதிர்கால சந்ததியினரின் மனதில் மொழி மீதான காதலை ஆழமாக ஊன்றியது.

ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியது ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமானதோடு, உலக அரங்கில் தெலுங்கு சினிமாவின் தரத்தை கொண்டு போய் நிறுத்தியது. உலகின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு மையமாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சினிமா உலகின் மையமாக மாறியுள்ள ஃபிலிம் சிட்டி, இந்திய துணைக்கண்டத்தின் படைப்பாளிகளை தன்னை நோக்கி ஈர்ப்பதாக உள்ளது. இந்தியாவின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தொலைக்காட்சி சேவையை தொடங்கியதால், ஐதராபாத் மாநகரை கலாச்சார கேந்திரமாக உருவாக்கியது இவரின் மற்றுமொரு சாதனை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற ராமோஜியின் நோக்கை தெளிவுபடுத்துவதாகவும் இது அமைந்தது.

இதழியல், காட்சி ஊடகம் என்பதைத் தாண்டி தொழில்துறை வல்லுநர், செய்தி ஆசிரியர், ஸ்டூடியோ நிறுவனர் என பன்முகங்களைக் கொண்டவர் ராமோஜி ராவ். இருப்பினும், இதழியலாளர் என்பதே அவரது பிரதான அடையாளமாக திகழ்ந்தது. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவின் தலைவராக செயல்பட்டபோது, இதழியல் துறையில் ஒருங்கிணைப்பு, தொழில் நேர்மை போன்றவற்றை பேணியதன் மூலம் சக இதழியலாளர்களால் விதந்தோதப்பட்டார்.

மாவட்ட அளவிலான பத்திரிகை பதிப்பு என்ற புதிய முன்னெடுப்பு சிறு ஊர்கள் அளவிலான இதழியல் செயல்பாட்டுக்கு வழி வகுத்தது. ஒடுக்கப்பட்ட மற்றும் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கத் துவங்கியது. "அன்னதாதா" போன்ற வெளியீடுகள் மூலம் விவசாயிகள் சந்திக்கும் சவால்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறினார். தலையங்கங்களில் அவரது புத்திசாலித்தனம் மற்றும் புதுமையான முயற்சிகள் ஊடகங்களின் உலகில் புரட்சியை ஏற்படுத்தியதோடு, சிறந்த செயல்பாட்டுக்கு புதிய தரத்தை நிர்ணயித்தன.

சினிமா உலகில் ராமோஜியின் சிறப்பான செயல்பாடு, படைப்பாற்றல், புத்திசாலித்தனமான கலைத்திறன் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கான சகாப்தமாகும். அவரது சினிமா தயாரிப்பு நிறுவனமான உஷா கிரண் மூவிஸ், தரமான , காலங்கடந்து நிற்கும் படைப்புகளை தந்திருக்கிறது. எண்ண ஓட்டத்தைத் தூண்டக் கூடிய கதைகளை, சுவையான கதை சொல்லலுடன் இவரது படங்கள் காட்சிப்படுத்தின. விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும் இந்த படங்கள் இணையான வெற்றியைப் பெற்றன.

தொலைநோக்கு கொண்ட தொழில்முனைவரான ராமோஜிராவ், வழக்கமான எல்லைகளைத் தாண்டி சவால்களை வாய்ப்புகளாக மாற்றி வளர்ச்சியும் புத்தாக்கமும் படைத்தவர். இல்லத்தரசிகளின் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிட் பண்டு திட்டம் தொடங்கப்பட்டது. இவரது நிறுவனம் நம்பிக்கை, வெளிப்படைத் தன்மை, இருதரப்பு பலன்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. நெறி நடத்தை மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து அவர் கொண்டிருந்த உறுதி அனைத்து தரப்பிலிருந்தும் அவருக்கு ஆதரவைப் பெற்றுத் தந்தது.

ராமோஜி ராவின் தலைமையில் இயங்கும் நிறுவனங்களிலும் ஒருமைப்பாடு, இரக்க மனப்பான்மை போன்றவற்றை அடிப்படை குணநலன்களாக பேணி வந்தார். சரியான நேரத்திற்கு சம்பளம் வழங்குவது, உயர்தர ஊடக நெறிகளைப் பின்பற்றுவது போன்றவற்றில் தானே ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்ததன் மூலம் பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பவராக இருந்தார்.

அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான தடுப்பரணாக இருந்து சாதித்துக் காட்டிய ராமோஜி ராவ், பல லட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றவராக திழ்ந்தார். 1984ம் ஆண்டு ஆந்திர பிரதேச அரசியலில் அசாதாரண சூழல் நிலவிய போது மக்களின் நன்மைக்காக நியாயத்தின் பக்கம் நின்று போராடி, அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒடுக்கப்பட்ட, குரலற்ற மக்களின் பக்கம் நின்று சலிப்பின்றி குரல் கொடுத்ததால், இருள் சூழ்ந்த நேரங்களில் விளக்காக அறியப்பட்டார். இன்று ராமோஜி ராவ் அவர்களின் மரபைப் பின்பற்றி சமூகம் மற்றும் கலாசாரத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர உறுதி பூண்டுள்ளோம்.

Last Updated : Jun 8, 2024, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.