தமிழ்நாடு

tamil nadu

பணியின்போது நெஞ்சுவிலி - சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் பணம் திரட்டிய காவலர்கள்

By

Published : Feb 12, 2020, 3:59 PM IST

கடலூர்: நெஞ்சுவலி ஏற்பட்ட காவலரின் மருத்துவ சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலம் சக காவலர்கள் உதவிக்கரம் நீட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Head constable suffers Heart attack while on duty
Money Handover to Head constable wife

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவருக்கு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதியன்று காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த மனோகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவருடன் பணியில் இருந்து சக காவலர்கள், மனோகரனை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், மேல் சிகிச்சைக்கு பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறினர்.

பின்னர், மனோகரன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என கூறினர்.

இதைத்தொடர்ந்து உடனடியாக ஆஞ்சியோ செய்யப்பட்டது. பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மற்றொரு ரத்த குழாயில் அடைப்பு உள்ளதாக தெரிவித்தனர். அதனை சரிசெய்ய ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும் எனவும் கூறினர்.

இவ்வளவு தொகையை அவரது மனைவியால் உடனடியாக தயார் செய்ய முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக உதவிக்கோரி கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சாந்தி, கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால்சுதர், உதவி ஆய்வாளர் ஆகாச மூர்த்தி, கடலூர் புதுநகர் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் முகநூலில் உள்ள காவலர்களிடமும் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு வங்கி கணக்கு எண்ணுடன் தகவல் பதிவிடப்பட்டது. இதைப் பார்த்த காவலர்கள், தங்களால் முடிந்த உதவியை பணமாக நேரிலும், வங்கி கணக்கிலும் செலுத்தினர்.

மருத்துவச் செலவுக்கு தேவையான தொகையாக ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று மனோகரனின் மனைவியிடம் கொடுத்தார்.

தற்போது மனோகரன் மருத்துவ சிகிச்சை முடித்து நல்ல நிலைமையில் உள்ளார். சக காவலரிலின் உயிரைக் காக்க உடனடியாக உதவிக்கரம் நீட்டிய அனைத்து காவலர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details