தமிழ்நாடு

tamil nadu

'டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை கைது செய்ய வேண்டும்'

By

Published : Jun 29, 2021, 4:36 PM IST

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் அதிகார இயக்கம் சார்பில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை கைது செய்ய வேண்டும்
டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை கைது செய்ய வேண்டும்

சென்னை: டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் அதிகார இயக்கத்தினர் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்கத்தின் தலைவர் கார்த்திகேயன், "அண்மை காலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசும் வீடியோக்கள் வலம் வருகின்றன. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்போது மாணவர்களை வழிகெடுக்கும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுக்களும் கலாசாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, திவ்யாகல்லச்சி, சுகந்தி, DJP என்ற பெண், சேலம் மணி, சிக்கந்தர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்" என்று புகாரில் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: செத்த பயலுவளா ஏம்ல இப்டி பண்ணுதீக: ஜி.பி. முத்து மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details