தமிழ்நாடு

tamil nadu

நக்சல் தாக்குதல்: ஆயுதங்களைத் தேடும் பணியில் காவல் துறை தீவிரம்

By

Published : Mar 23, 2020, 10:47 AM IST

பஸ்தார்: சுக்மா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 15 ஆயுதங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக டிஐஜி (காவல் மண்டலத் துணைத் தலைவர்) தெரிவித்தார்.

துணை காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ்
துணை காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தார் பகுதியில், நக்சல்கள், பாதுகாப்புப் படையினருக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனிடையே, காணாமல்போன 17 வீரர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

டிஐஜி சுந்தர்ராஜ் பட்டிலிங்கம் பேசிய காணொலி

இது குறித்து வடக்கு பஸ்தார் பகுதி காவல் மண்டலத் துணைத் தலைவர் சுந்தர்ராஜ் பட்டிலிங்கம் கூறுகையில், “ஆயுதப்படையினரின் தகவலின்படி, சத்தீஸ்கர் பஸ்தார் மாவட்டத்தில் 800 நக்சல்கள் உலவிவருகின்றனர். சுக்மாவில் நடைபெற்ற நக்சல் தாக்குதலில், பயன்படுத்தப்பட்ட 17 ஆயுதங்களில், இரண்டு ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம். மேலும், 15 ஆயுதங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குச்சந்தை

ABOUT THE AUTHOR

...view details