தமிழ்நாடு

tamil nadu

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: ‘தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம்’- முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு!

By

Published : Nov 23, 2020, 10:10 PM IST

புதுச்சேரி: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை (நவ. 24) முதல் நவ.25 ஆம் தேதி வரை தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என முதலமைச்சர நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரியில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று (நவ. 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச்செயலர் அஸ்வனி குமார், காவல் துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வது, மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, கனமழை பெய்யும் பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவது உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, “புயல் அறிவிப்பையடுத்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தினோம். ஒவ்வொரு துறைகளுக்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மின்கம்பம் சரியாக உள்ளாதா என ஆய்வு செய்யவும், மரங்களிலுள்ள கிளைகளை கழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக நாளை மாலையிலிருந்து நவ. 25 ஆம் தேதிவரை தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவேண்டாம், வியாபார நிறுவனங்களை மூட வேண்டும், 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்குச் செல்ல வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தேவையான மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம், சமுதாய நலக்கூடங்களில் தங்கவைத்து போதுமான உணவு வழங்கப்படும். தாழ்வான பகுதிகளில் எஞ்சின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: நிவர் புயலை சமாளிக்க அனைத்தும் தயார் - புதுக்கோட்டை ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details