கரெளலி: ராஜஸ்தான் மாநிலம் கரெளலி - மாண்ட்ராயல் சாலையில் பொலிரோ வாகனம் சென்று வேகமாக கொண்டு இருந்துள்ளது. துண்டபுரா அருகே சாலையின் வளைவில் திரும்பும் போது பொலிரோ வாகனமும், எதிரே வந்த டிரக்கும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பொலிரோ வாகனத்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து குறித்த சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் திரண்டனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் மற்றும் ஆம்புலன்சுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலனிசில் அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், பொலிரோ வாகனத்தில் பயணித்த 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து அறிந்து மாவட்ட ஆட்சியர் நீலப் சக்சேனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
எப்படி விபத்து நேரிட்டது என்ற முழு தகவல் தெரியவராத நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2000ல் போடப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு.. சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு! - Medha Patkar