ETV Bharat / bharat

2000ல் போடப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு.. சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை- டெல்லி நீதிமன்றம் உத்தரவு! - Medha Patkar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 7:16 PM IST

அவதூறு வழக்கில் சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறைத் தண்டனை விதித்து டெல்லி சாகேத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Etv Bharat
Activist Medha Patkar sentenced (ETV Bharat)

டெல்லி: கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி, தற்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருக்கும் விகே சக்சேனா குறித்து மேதா பட்கர் கருத்து வெளியிட்டார். அதில் அப்போது குஜராத் அரசின் முக்கிய பொறுப்பில் இருந்த விகே சக்சேனா வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு மாநில மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததாக தெரிவித்து இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விகே சக்சேனா கடந்த 2001ஆம் ஆண்டு மேதா பட்கர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை குஜராத்தில் இருந்து டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் மாற்றி கடந்த 2003ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு தான் நிரபராதி என்றும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் மேதா பட்கர் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் 24ஆம் தேதி சாகேத் நீதிமன்றம் சமூக ஆர்வலர் மேதா பட்கரை குற்றவாளி என அறிவித்தது.

இதனிடையே அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என விகே சக்சேனா தரப்பில் சாகேத் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த ஜூன் 7ஆம் தேதி தீர்ப்பு வெளியிடுவதை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், அவதூறு வழக்கில் சாகேத் நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பை வெளியிட்டார். அதில் அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், மேத பட்கர் வழக்கு தொடர்பாக மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார்.

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கக் கூடும் என்ற நிலையில், அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு தண்டனைக் காலத்தை 5 மாதமாக குறைத்ததாக நீதிபதி கூறினார். மேலும், அவதூறு வழக்கில் விகே சக்சேனாவுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கவும் மேதா பட்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: "ரூ.7,581 கோடி மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன"- ரிசர்வ் வங்கி! - RBI on 2 thousand Rupees note

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.