தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துபாயில் இறந்த இந்தியர்... சொந்த ஊருக்கு வந்த உடல் - மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: துபாயில் இறந்த இந்தியரின் உடல் ஈடிவி பாரத் உள்ளிட்ட செய்தி ஊடககங்களின் தாக்கம் காரணமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

ETV
ETV

By

Published : Apr 27, 2020, 9:57 AM IST

துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் பட் என்பவர் அண்மையில் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது பெரும் போராட்டத்திற்கு பின்னர் இந்தியா கொண்டுவரப்பட்டது. அவரது உடலை தற்போது பொற்றுக்கொண்ட உறவினர்கள் தங்களின் நிம்மதியை பகிர்ந்துகொண்டனர்.

கமலேஷ் பட்டின் தம்பியான விமலேஷ் பட் பேசுகையில், ”கடந்த சில நாள்களாக இந்த விவகாரத்தில் இந்திய அரசு நடந்துகொண்ட விதம் அவமானத்திற்குரியது. அனைத்து அமைச்சகத்திற்கும் இடையே எந்தவித ஒருங்கிணைப்பு இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. ஈடிவி பாரத் உள்ளிட்ட ஊடகங்களின் உதவியுடன்தான் இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி கிடைத்துள்ளது” என நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

கமலேஷ் பட் உடல்

விவகாரத்தின் பின்னணி

துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் பட் ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். பெரும் முயற்சிக்குப் பின் கமலேஷ் பட்டின் உடல் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், கோவிட் -19 பெருந்தொற்று அச்சம் காரணமாக, இந்தியா கொண்டுவரப்பட்ட கமலேஷின் உடல் இந்தியாவிலிருந்து மீண்டும் துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக ஈடிவி பாரத் அவரது குடும்பத்தினர், உறவினர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி செய்தி வெளியிட்டிருந்தது. உயரிழந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்தார், கோவிட்-19 பெருந்தொற்றால் அல்ல என்ற மருத்துவ ஆதாரத்தை ஈடிவி பாரத் வெளியுறவுத் துறையின் பார்வைக்கு முன் வைத்தது.

கமலேஷ் பட் இறப்புச் சான்றிதல்

இதையடுத்து, கமலேஷ் பட்டின் உடலை இந்தியாவுக்கு வரவைத்து அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் தடையில்லாச் சான்றிதழை வழங்கியுள்ளது. அதேபோல் குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க:TRS கட்சியின் 20வது ஆண்டு விழாவை எளிமையாக கொண்டாடுங்கள் - KCR

ABOUT THE AUTHOR

...view details