தமிழ்நாடு

tamil nadu

நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்!

By

Published : Jan 8, 2020, 5:51 PM IST

புதுச்சேரி: மாநிலத்துக்கு யார் தொல்லை கொடுத்தாலும் எதிர்த்து சமாளிக்கும் சக்தி அரசுக்கும், அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு என அம்மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.

inauguration of the library
inauguration of the library

புதுச்சேரி மாநிலம், பூரணாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினர் கண்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசு கிளை நூலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தனர்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, ' புதுச்சேரி மாநிலம் மனிதவள மேம்பாடு, மருத்துவம் உள்ளிட்ட நான்கு இடங்களில் யூனியன் பிரதேசங்களில் முதலிடம் வகித்துள்ளது. அதேபோல் பாரதிய ஜனதா அரசு வளர்ச்சி 4.5 % என்றால் புதுச்சேரி மாநில வளர்ச்சி 11.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது ' என்று பெருமைபடக் கூறினார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்துக்கு யார் தொல்லை கொடுத்தாலும் எதிர்த்து சமாளிக்கும் சக்தி அரசுக்கும், அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

நூலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்

இந்த நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் முகமது மன்சூர், கல்வித்துறை இயக்குநர் ருத்ரன், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனந்த ராமன் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தீபிகா படுகோன் மீதான விமர்சனதுக்கு கனிமொழி கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details