தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளது.
கும்பக்கரை அருவியில் வெள்ளம்.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
Published : 5 hours ago
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவி. இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (நவ.17) மாலை முதல் கனமழை பெய்துள்ளது. இதனால், கும்பக்கரை அருவி நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவியில் நீர் வரத்து சீராகும் வரை விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.