ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை கடலோரப் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால் நங்கூரமிட்டு நின்ற 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்கு வர முடியாமல் அவதி அடைந்தனர்.
1 கி.மீ தூரம் உள்வாங்கிய திருப்பாலைக்குடி கடல்!
உள்வாங்கிய திருப்பாலைக்குடி கடல் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Sep 21, 2024, 7:59 AM IST
அதேநேரம், காற்றின் சுழற்சி காரணமாக செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் உள்வாங்குவதும், பின்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வு என மீனவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், இன்று திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியதால் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.