தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப் பகுதியின் அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் உள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுருளி அருவியில் தஞ்சமடைந்த யானை.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
Published : Jun 9, 2024, 6:26 PM IST
இந்த நிலையில், கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று அருவியில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், ஒற்றைக் காட்டு யானை அருவியின் அருகே உலா வந்து தஞ்சம் அடைந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்ததன் பெயரில், சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு தஞ்சமடைந்துள்ள காட்டு யானையை வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கான பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.