நீலகிரி:குன்னூரில் உள்ள நான்சச் எஸ்டேட், சிஎஸ்ஐ பள்ளி எதிரே செல்வநாயகம் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவர் பிக்கப் வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு சென்ற நிலையில், அவரது மனைவி டேன்டீ எஸ்டேட்டில் பணிக்கு சென்றுள்ளார்.
குன்னூர் அருகே பள்ளிக்கு அருகே பயங்கர தீ விபத்து!
Published : Sep 25, 2024, 7:06 PM IST
இதனால் கடையில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் மட்டும் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீ பற்றியதை அறிந்த முதியவர் அங்கிருந்து வெளியே வெளியே வந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கொலக்கம்பை காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் மளிகைக் கடை மற்றும் வீடு எரிந்து சாம்பலானது. கடைக்கு எதிரே இருந்த பள்ளியில் மாணவர்கள் வகுப்பறைக்குள் இருந்ததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் தீ பற்றியது எப்படி? என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.