நீலகிரி: மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் ராட்சத மரங்கள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததில் ரயில் பாதை சேதமடைந்து ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இத்தகைய சூழலில், கடந்த வாரம் தெற்கு ரயில்வே வரும் 16ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது.
நீலகிரி மலை ரயில் சேவை ஆக்.22 வரை ரத்து!
நீலகிரி மலை ரயில் (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Aug 16, 2024, 10:49 PM IST
இந்நிலையில், இன்று ரயில் பாதையினை தென்னக ரயில்வே நிர்வாக இயக்குநர் மற்றும் சிறப்புக்குழு ஆய்வு செய்ததில், மீண்டும் 22ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் - உதகை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை போக்குவரத்து வழக்கம் போல் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.