ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்ப்பு: "கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது" - வைகோ - STERLITE PLANT CLOSE ISSUE

ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது கால் நூற்றாண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 2:06 PM IST

சென்னை: ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மீதான விசாரணை முடிவில், மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1-ல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் இந்த ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் இருந்து மதிமுக மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு 1998-ல் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது.

தொடர்ந்து, 2010-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடைப்பெற்றது. கடந்த 2013ல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் நடைபயிற்சி சென்றவர்களும், பொதுமக்களும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்து, மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பையும் தமிழ்நாடு அரசு துண்டித்தது.

ஆனால், 2013ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்நாயக், கோகலே அமர்வு, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தும் தீர்ப்பளித்தது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டது. மேலும், ஸ்டெர்லைட் நிர்வாகம் நிலம், நீர் பாதிப்புகளுக்காக ரூ.100 கோடி வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் தொற்று நோய், சரும நோய் இவற்றால், தூத்துக்குடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சாதகமாக பயன்படுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மேலும் இரண்டு மடங்கு விரிவாக்கம் செய்ய முனைந்தது. அதிமுக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக 2018ல் ஆணைப் பிறப்பித்தது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2018 இல் அனுமதி அளித்தது. 2019 உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: "2026 இல் விஜயை அரியணையில் அமர்த்துவோம்" - ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் தாயார் சபதம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், 2020 ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆலையை திறக்க கோரிய ஸ்டெர்லைட் மனு மீதான விசாரணை முடிவில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நேற்று (நவ.16) வெளியானது. இதில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அதில், “ஒரு தொழில்துறையை மூடுவது ஒரு முதல் தேர்வு அல்ல. ஆனால், வேதாந்தாவின் கடுமையான மீறல்களுடன் நீண்ட மற்றும் தொடர்ச்சியான மீறல்களும் தூத்துக்குடி ஆலையை வேறு வழியின்றி மூடும் நிலைக்கு உயர் நீதிமன்றத்தையும் சட்டப்பூர்வ அதிகாரிகளையும் தள்ளியது. இந்த ஆலை நாட்டின் தாமிர உற்பத்திக்கு பங்களித்துள்ளது.

அப்பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனாலும், நிலையான வளர்ச்சி, பொது நம்பிக்கை மற்றும் மாசுபடுத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவை மிகவும் முக்கியமானவை. இப்பகுதியில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது. அவர்களின் கவலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து கால் நூற்றாண்டு காலம் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெற்றி” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.