சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார் . இதனால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் - தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை!
Published : Jul 18, 2024, 10:15 PM IST
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள், செயலாளர் மாற்றம் நடைபெற்றது. இச்சூழலில் தான் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, ரவுடிகளை கண்காணித்து சட்டம் ஒழுங்கை நிலவரத்தை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், உள்துறை செயலாளர் தீரஜ் குமார் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.