ETV Bharat / state

சூட்கேசில் சிறுமி சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: பெங்களூரு தம்பதி பிடிபட்டது எப்படி?

சங்ககிரி அருகே சூட்கேஸில் சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், சிறுமியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிச் சென்றதாக பெங்களூரு தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சடலம் கிடந்த சூட்கேஸ், கைதான அபினேஷ்சாகு, அஸ்வின்பாட்டில்
சடலம் கிடந்த சூட்கேஸ், கைதான அபினேஷ்சாகு, அஸ்வின்பாட்டில் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 4:52 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறிய பாலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம், 30ஆம் தேதி துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தைத் தொடர்ந்து உடனடியாக விரைந்து வந்து சங்ககிரி போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சூட்கேஸில் பாலிதீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றப்பட்ட நிலையில் பெண் சடலம் அழுகி நிலையில் கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா, மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர். இது தொடர்பாக பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த, ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதி அபினேஷ்சாகு (வயது 40), அஸ்வின்பாட்டில் (37) ஆகியோரை சங்ககிரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் கூறுகையில்,“வைகுந்தம் சுங்கச்சாவடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து திரும்பிய கார்களின் பதிவெண்கள், அப்பகுதியில் உள்ள மொபைல் போன் கோபுரத்தில் பதிவான எண்கள், சடலம் கண்டெடுத்த இடத்தில் கிடைத்த வெளிநாட்டு வங்கி பெயர் அச்சிட்ட பிளாஸ்டிக் பையை வைத்து விசாரணை நடத்தினோம்.

114 கார்கள், அந்த சாலையில் குறிப்பிட்ட இரு நாட்களில் வந்து சென்றது தெரியவந்தது. அதேநேரம் அங்கு பயன்படுத்திய மொபைல் எண்கள் குறித்தும் விசாரித்தோம். அனைவரும் வந்து சென்ற காரணத்தை சரியாக கூறினர். ஆனால், கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட எக்ஸ்.யு.வி 300 மாடல் காரை ஓட்டி வந்த அபினேஷ்சாகு, முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். பின் அவரது மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

இதையும் படிங்க: 16 வயது சிறுமி கொலை; ஊதுபத்தி ஏத்தி நாடகமாடியது அம்பலம்!

ஆனாலும் நாங்கள் விடாமல் அந்த மொபைல் எண் மூலம் யார், யாரிடம் பேசினார் என விசாரித்தோம். அதில் கிடைத்த தகவலையடுத்து பின் ஒடிசாவில் பதுங்கி இருந்த, அபினேஷ்சாகுவை கடந்த, அக்டோபர் மாதம் 26ம் தேதி சுற்றி வளைத்து பிடித்தோம். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது மனைவியான அஸ்வின்பாட்டில் என்பவரையும் மூன்று நாட்கள் கழித்து பிடித்தோம். பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினோம்.

அதில் இறந்த பெண் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் பகுதியை சேர்ந்தவர். 15 வயதான அந்த சிறுமி, ஒடிசாவில் உள்ள அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தார். அந்த அனாதை ஆசிரமத்தை, அபினேஷ் சாகுவின் தந்தை நடத்துகிறார். இதனால் அச்சிறுமியை வீட்டு வேலைக்காக அபினேஷ் சாகு, பெங்களூரு அழைத்து வந்தார். அவர் சரியாக வேலை செய்யாததால், அஸ்வின்பாட்டில், சிறுமியின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

அதில் அவர் உயிரிழந்தார். இதனால் சடலத்தை சூட்கேஸில் அடைத்து எடுத்து வந்து சேலம் - பெங்களூரு பை பாஸ் சாலையில், வைகுந்தத்தில் வீசிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தோம்” என்று தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.