சென்னை : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2 திரைப்படத்தின் 'Pushpa 2 Wild Fire Event' நிகழ்ச்சியானது சென்னையில் இன்று (நவ 24) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் அல்லு , "நான் பிறந்த இந்த மண்ணுக்கு அன்பான வணக்கம். தமிழ் மக்களே சென்னை மக்களே வணக்கம். மறக்க முடியாத நாள். எத்தனையோ வருடங்கள் இதற்காக எதிர்பார்த்தேன். எங்கே போனாலும் சென்னை வரும் போது அந்த ஃபீலே வேறு. உணர்வுப்பூர்வமான நெருக்கம். நான் இப்போ எப்படி இருக்கிறனோ அது இந்த மண் கொடுத்தது.
Brand Pushpa Raj will take over the box office worldwide on December 5th 🫲🔥🔥🔥#Pushpa2TheRule#Pushpa2TheRuleOnDec5th pic.twitter.com/k5KHYg6yhX
— Mythri Movie Makers (@MythriOfficial) November 24, 2024
தி.நகர் சென்னை பையன் நான். மேடையில் பேசும்போது கொஞ்சம் தமிழ் மறந்து விடுவேன். ஆனால் நண்பர்களுடன் பேசும் போது வேறு மாதிரி. காட்டுத் தீயை உங்களுக்கு கொடுக்க மூன்று ஆண்டுகளாக உழைத்துள்ளேன். என் ஊரில் ஒரு நிகழ்ச்சி வேண்டும் என்று 20 ஆண்டுகளாக நினைத்திருந்தேன்.
இதற்கிடையில், தெலுங்கில் பேசுங்க.. தெலுங்கில் பேசுங்க.. என்று ரசிகர்கள் கூச்சலிட, தமிழில் தான் பேச வேண்டும். ஏனெனில், இந்த மண்ணுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. எங்கு போனாலும் அந்த மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
One step that lit up the entire evening 💥💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) November 24, 2024
The auditorium erupted as Icon Star @alluarjun shook his leg for the ICONIC #PushpaPushpa step at the #Pushpa2WildFireEvent ❤🔥#Pushpa2TheRule#Pushpa2TheRuleOnDec5th pic.twitter.com/tRfTwVv47b
நான்கு வருடமாக ஒரே ஒரு பெண்ணை மட்டும் தான் பார்க்கிறேன் அது ராஷ்மிகா. ஸ்ரீலீலா ரொம்ப கடினமாக உழைக்கும் பெண். ரொம்ப க்யூட். எனது முதல் படம் நடித்த பிறகு ஒருவருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் ஆர்யா படத்துடன் வந்தார். ஆர்யா படம் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. எனது ரசிகர்கள் ரொம்ப அன்புடன் இருக்கிறார்கள் எனது ஆர்மி அவர்கள்.
இதையும் படிங்க : 'குட் பேட் அக்லி' ரிலீஸ் எப்போது? - 'புஷ்பா 2' நிகழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்!
எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள். யாருடைய படத்துக்கு நீங்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு, ரஜினிகாந்த் படம் என்றார். கதை நன்றாக இருந்தால் யார் கூட வேண்டுமானாலும் இணைந்து நடிப்பேன்" என மேடையில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, தயாரிப்பாளர் தானு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் நவீன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சிஇஓ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்