கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சாலையோரத்தில் சிறுத்தை அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி, வரையாடு, புள்ளிமான், கடமான், பாம்பு வகைகள், இருவாச்சி குருவி மற்றும் பிற இன பறவைகள் மற்றும் எண்ணற்ற அபூர்வ இன தாவரங்கள் அதிக அளவில் உள்ளன. தமிழ்நாடு வனத்துறையால் இந்த பகுதி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியாக அரசு அறிவித்து பாதுகாக்கப்பட்ட இடமாக உள்ளது.
இதையும் படிங்க: நிரம்பி வழியும் கும்பக்கரை அருவி.. ஆறு போல் மாறிய சாலை..!
தற்போது தீபாவளி தொடர் விடுமுறையைத் தொடர்ந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை புது தோட்டம் பகுதியில், சாலை ஓரத்தில் ஒரு சிறுத்தை நடமாடியது. அதனை அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து உள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆழியார் சோதனை சாவடியில் ஆறு மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் இரவு நேரத்தில் வனவிலங்குகள் சாலைகளில் அதிக அளவில் நடமாடும் என்பதால் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்