ETV Bharat / state

ரூ.2,000 கடனை திருப்பிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை...4 பேர் கைது! - MURDER CASE

திருப்பத்தூர் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 5:29 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட இளைஞ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த தகவல் தெரிவித்த போலீசார், "ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரன். அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்கின்ற மணிகண்டன் என்பவரிடம் சில வருடங்களுக்கு முன்பு 2000 ரூபாய் பணத்தை கொடுத்ததாகத் தெரிகிறது. இந்த தகவலை அவர் தமது பெரியம்மா பையனான கிருபாகரன் என்பவரிடமும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வருடம் சிங்கப்பூருக்கு சென்ற கோடீஸ்வரன் ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த 1 ஆம் தேதி கிருபாகரன் மற்றும் மணிகண்டன் உடன் சிலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது தமது அண்ணனிடம் மணிகண்டன் வாங்கிய 2000 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக மணிகண்டன் மற்றும் கிருபாகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.உடனே அவர் இது குறித்து தனது அண்ணன் கோடீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூட்கேசில் சிறுமி சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு: பெங்களூரு தம்பதி பிடிபட்டது எப்படி?

அப்போது அங்கு வந்த கோடீஸ்வரனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர் டில்லி பாபு ஆகியோர் கோடீஸ்வரனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோடீஸ்வரன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அடியத்தூர் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு, வசந்த மற்றும் பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், நவீன் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளோம்,"என்று கூறினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.