தருமபுரி:கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக நீர்வரத்து தமிழகத்திற்கு வரும் அளவு குறைந்து காணப்பட்ட நிலையில், இரு தினங்களுக்கு முன்பு 75 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 42 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து மேலும் குறைந்து 28 ஆயிரம் கன அடியாக இருந்தநிலையில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி 60 ஆயிரம் கன அடியாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கன அடி நீர்வரத்து!
ஒகேனக்கல் (Credits- ETV Bharat Tamil Nadu)
Published : Jul 25, 2024, 5:21 PM IST
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதை யடுத்து தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்குள் நீர் வந்தடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பத்தாவது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் தடை நீடிக்கப்பட்டுள்ளது.