ETV Bharat / state

ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு-சென்னை திருவொற்றியூரில் சோகம்! - THIRUVOTTIYUR ACCIDENT

திருவொற்றியூரில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் நால்வர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதிநித்துவ படம்
பிரதிநித்துவ படம் (Image credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 6:02 PM IST

சென்னை: திருவொற்றியூரில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை அருகில் உள்ள எண்ணூர் வ உ சி நகரை சேர்ந்த முருகன் (எ) டேனியல் (37), மகன் மோசஸ் ( 12), தாய் ஸ்டெல்லா ராணி மகள் ஸ்வீட்டி (7) ஆகிய நான்கு பேரும் தேவாலயத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மணலி விரைவுச் சாலையில் சாத்தாங்காடு அறுகே உள்ள சர்வீஸ் சாலையில் நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாரத வகையில் இருசக்கர வாகனம் மோதியதில் முருகன்( எ) டேனியல் (37), மகன் மோசஸ்( 12), இருவரும்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாய் ஸ்டெல்லா ராணி மகள் ஸ்வீட்டி (7) ஆகிய இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

இதேபோன்று மணலி எம் எஃப் எல் அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த திருவெற்றியூர் ஒண்டிக் குப்பத்தை சேர்ந்த முகமது அலி (40) மீது கண்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இன்னொரு சாலை விபத்தில் இருவர் பயணித்த இருசக்கர வாகனம் வெள்ளி வாயில் சாவடி பகுதியில் டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் வினோத் (23) சம்பவ இடத்திலேயே பலியானார். சாலை விபத்துகளில் நால்வர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.