வேலூர்:சென்னை காவல்துறையில் சென்னை மாநகர் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் செந்தில்குமார் (55). இவர் காட்பாடியிலிருந்து சென்னை வருவதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து, இன்று ரயில் ஏறுவதாக இருந்தார். இந்நிலையில், அவர் மங்களூரிலிருந்து சென்னை வரும் ரயில் நடைமேடையில் ஏறாமல், அதற்கு எதிர்திசையில் உள்ள நடைமேடையில் தவறாக நின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
ரயிலில் இருந்து தவறி விழுந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!
கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
Published : Nov 1, 2024, 2:52 PM IST
அப்போது பின் பக்கமாக ரயிலில் ஏறிய போது தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, காட்பாடி ரயில்வே காவல்துறையினர், அவர் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.