முகத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கும் புருவத்தை கருகருவென அடர்த்தியாக வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது? உங்களுக்கும் கருகரு புருவம் வேண்டுமா? அப்ப, தினசரி கீழே கொடுக்கப்ப்பட்டுள்ள டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி பாருங்க..
காபி தூள்: புருவங்கள் அடர்த்தியாக மற்றும் கருகருவென வளர, காபி தூள் உதவியாக இருக்கிறது. இதற்கு வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய காபி டின்டை செய்து பயன்படுத்தலாம். அதற்கு, ஒரு கிண்ணத்தில் சிறிது காபி தூளை எடுத்து அதனுடன் சிறிது பெட்ரோலியம் ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையை ஃபிரிட்ஜில் வைத்து, வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள் இரவில் தூங்குவதற்கு முன் புருவத்தில் தடவி காலையில் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், ஒரு மாதத்தில் மாற்றத்தை காணலாம்.
கறிவேப்பிலை: புருவங்களை அடர்த்தியாக்க உதவும் பொருட்களில் கறிவேப்பிலையும் ஒன்று. இதற்கு, 15 கறிவேப்பிலைகளை இலைகளை இரவில் தூங்குவதற்கு முன்னதாக, நசுக்கி வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்துவிடுங்கள். பின்னர், காலையில் எழுந்து அந்த நீரை புருவங்களில் தடவி பதினைந்து நிமிடங்களுக்கு பின் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
விளக்கெண்ணெய்: அடர்த்தியான புருவங்களை பெற விளக்கெண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கிறது. தினசரி, இரவில் தூங்குவதற்கு முன் சிறிது விளக்கெண்ணெய்யை புருவத்தில் தடவி காலையில் எழுந்ததும் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து, செய்து வரும் போது ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.
மருதாணி: புருவங்களுக்கு இயற்கையான நிறத்தை கொடுப்பதில் மருதாணி பயனுள்ளதாக இருக்கும். அதற்கு ஒரு கிண்ணத்தில் சிறிது மருதாணி பொடியில், எலுமிச்சை சாறு சேர்த்து இரண்டையும் நன்கு கலந்து புருவங்களில் தடவவும். பின்னர், 40 முதல் 45 நிமிடங்கள் கழித்து கழுவவும். இப்படி செய்வதால் புருவங்களின் நிறம் 15 நாட்கள் வரை இருக்கும். இதனை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: Pedicure: செலவே இல்லாமல் வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்... எப்படினு தெரியுமா? முகத்தில் கரும்புள்ளியா..? கவலைய விடுங்க... இத ட்ரை பண்ணுங்க! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்