ETV Bharat / bharat

காவிரி ஒழுங்குமுறை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு முன்வைக்க முக்கிய கோரிக்கை என்ன? - CAUVERY WATER

"தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பின் காரணமாக மேகதாது என்பது தீர்மானத்தில் இல்லை" என காவிரி ஒழுங்குமுறை ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் நீர்வளத் துறை செயலாளர் மணிவாசன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறை ஆணைய கூட்டம்
டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறை ஆணைய கூட்டம் (Credit - PWD)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 8:05 PM IST

டெல்லி: புது டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 35 வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டததில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் ( Hybrid Method ) இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெற்றது. இதில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்து உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும், நேரடியாகவும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபி ராமன், காவிரி தொழில்நுட்பக் குழு உதவி செயற்பொறியாளர் குளஞ்சிநாதன், உதவி பொறியாளர் நிஷா ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர்.

காவேரி மேலாண்மைக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் மணிவாசன், கூறுகையில்,"காவேரி மேலாண்மை வாரியத்தின் 35வது கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காவேரியில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய பங்கு அதேபோல் தமிழ்நாட்டிலிருந்து காரைக்காலுக்கு சேர வேண்டிய பங்கு ஆகியவை முறையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க:"சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோக்கள்"-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

தண்ணீர் பற்றாக்குறை இருக்காது: நவம்பர் மாதம் 6 ந் தேதி வரையில் காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீர் அளவு 2.2 டிஎம்சி தான். ஆனால் 4.2 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. நவம்பர் மாதம் முழுவதும் 13.78 டிஎம்சி தர வேண்டும். அதனைக் கொடுக்க வேண்டும் எனவும், டிசம்பர் மாதம் 7.35 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி ஜூன் மாதம் முதல் 145.65 டிஎம்சி தமிழ்நாட்டிற்கு காவேரியில் கொடுக்க வேண்டும். ஆனால் 248 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. இதனை மாதந்தோறும் வழங்க வேண்டும் என்பதைத் தான் வலியுறுத்தி வருகிறோம். அதிகளவில் மழை பெய்து தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையில் வெள்ளநீரைக் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

மேட்டூர் அணைக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துக் கொண்டு இருக்கிறது. எனவே இந்தாண்டு டெல்டா பகுதி விவசாயிகளுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. குடிநீர் பிரச்சனையும் வராது, நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பின் காரணமாக மேகதாது என்பது தீர்மானத்தில் இல்லை.

தற்பொழுது காவேரியில் தண்ணீர் அதிகளவில் வருகிறது. தண்ணீர் அதிகளவில் வரும்போது சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கர்நாடகா தமிழ்நாட்டிற்கு வழங்குவது போல், காரைக்காலுக்கு தமிழ்நாடு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.