ETV Bharat / business

ஹத்ராஸ் பெருங்காயம்: இந்தியாவை உலக வரைபடத்தில் இணைத்த புவிசார் குறியீடு பெற்ற மசாலா! - HATHRAS HING

இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலும் சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மசாலாவான பெருங்காயத்தை உற்பத்தி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2025, 6:59 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் மேற்கு பகுதியில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்துக்குள் நீங்கள் நுழையும் போது பெருங்காயத்தின் வாசனை உங்கள் மூக்கை துளைக்கும். இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலும் சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மசாலாவான இதனை உற்பத்தி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஹத்ராசின் பெருங்காயத்துக்கு 2023ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு கிடைத்ததில் இருந்து இந்த தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த வர்த்தகத்தில் ஹத்ராசின் பல்வேறு குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

பால் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கும் பதான்ஸ் என்ற மசாலா உள்ளூர் சந்தைகளில் கிடைத்து வந்தது. ஒரு காலகட்டத்தில் அது சந்தைகளில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. எனவே ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஹர்தாசில் பெருங்காயம் வர்த்தகம் தொடங்கியது.

இது குறித்து பேசிய ஹர்தாசின் உள்ளூர் வணிகர் பாங்கே பிஹாரி,"பதான்ஸ் கிடைப்பது நின்று போனது. எனவே நமது முன்னோர்கள் பெருங்காயம் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். காரத்தன்மையைப் பொறுத்து பெருங்காயம் சுத்தமானதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஒரு காலகட்டத்தில் அதில் மருத்துவத் தன்மை இருப்பதை வர்த்தகர்கள் அறிந்தனர். அதனை தவிர்க்க முடியாத சமையல் மூலப்பொருளாக மாற்றினர்,"என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்திய சமையல் அறைகளில் முக்கியமான பொருளாக பெருங்காயம் இடம் பெற்றது. அதன் ஜீரண சக்தியின் காரணமாக மதிப்பு வாய்ந்ததாகவும் ஆனது. அதிகரித்து வரும் சந்தையின் தேவையை கருத்தில் கொண்டு பெருங்காயத்தின் உற்பத்தி அதிகரித்தது. வீட்டில் இருந்து சிறு தொழிலாக செயல்படும் நிறுவனங்கள் பெருநிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளன.

பல தலைமுறைகளாக பல குடும்பத்தினர் ஹத்ராசில் இந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெருங்காயம் உற்பத்தி தொழிலில் ஹத்ராசில் சிறிய, பெரிய என 125 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் 12,000த்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி பொருள் என்ற முயற்சியின் மூலம் பெருங்காயம் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. பல்வேறு குடும்பங்கள் இதனால் பயன்பெறுகின்றனர்.

இது குறித்து பேசிய விஷால் அகர்வால் என்ற வணிகர், "இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. புவிசார் குறியீடு என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தாசில் இருந்து வரும் இந்த பெருங்காயத்துக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது," என்றார்.

புவிசார் குறியீடு மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் ஹர்தாசின் பெருங்காயத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பிடத்தக்க அளவு ஏற்றுமதியின் மூலம் சர்வதேச சந்தையிலும் இடம் பிடித்திருக்கிறது.

"புவிசார் குறியீட்டின் மூலம் எங்கள் பொருளுக்கு தேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதனால் எங்களுக்கு குறிப்பிடத்தக்க பலன் கிடைத்திருக்கிறது. முன்பு சிலருக்கு மட்டுமே ஹத்ராஸ் பெருங்காயம் பற்றி தெரிந்திருந்தது. ஆனால், இப்போது இந்த புவிசார் குறியீடு காரணமாக இந்தியாவின் பெருங்காயத்தின் தலைநகராக ஹத்ராஸ் திகழ்கிறது. இது விற்பனையை அதிகரித்திருக்கிறது," என்றார் ராஜேஷ் அகர்வால் என்ற இன்னொரு வர்த்தகர்.

பெருங்காயத்தை உள்நாட்டில் பயிரிட பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகள் மேற்கொண்டால் அது இந்த சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஹத்ராஸ் வணிகர்கள் கருதுகின்றனர். "இமயமலைப் பகுதிகளில் பெருங்காயம் விளைவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. இது சரியான திசையில் எடுக்கப்பட்ட நகர்வாகும். எனினும் இந்த பெருங்காயம் பயிரிட்டு முதிர்வு அடைவதற்கு நான்கு முதல் 5 ஆண்டு காலம் பிடிக்கும். இது வெற்றிகரமாக பயிரிடப்பட்டால், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க முடியும். ஆண்டு வருவாயையும் அதிகரிக்க முடியும்," என்றார் பாங்கே பிஹாரி.

இந்தியாவில் ஆண்டுக்கு 1500 டன் பெருங்காயம் உட்கொள்ளப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.940 கோடியாகும். சர்வதேச சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பெருங்காய பயிரில் இருந்து அரை கிலோ சாறு கிடைக்கும். அதனை பின்னர் கட்டியாக மாற்ற வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.