மதுரை: தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் 104 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 4 குழந்தைகள் கண் பார்வையை முற்றிலும் இழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வேதனை தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சிகிச்சைக்காக வந்த 104 பேரில் 10க்கும் மேற்பட்டோர் கரு விழியில் பாதிப்பு (Corneal Tear), 4 குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பார்வை பாதிப்பில் கண்கள் எடுக்கப்பட்டது (Enucleation)” என தெரிவித்திருந்தனர்.
தீபாவளியின் போது தங்கள் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் நேரங்களில் பெற்றோர் உடனிருந்து மிக கவனத்துடன் குழந்தைகளை வெடிகளை கையாள்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.