ETV Bharat / state

"மனித உரிமைகள் ஆணைய தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு" - டிஜிபியிடம் வழக்கறிஞர் சங்கம் மனு! - NHRC CHAIRMAN

"மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மணிக்குமாருக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், டிஜிபி சங்கர் ஜிவால்
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், டிஜிபி சங்கர் ஜிவால் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 6:00 PM IST

சென்னை: தமிழக டிஜிபிக்கு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார் அளித்துள்ள மனுவில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ள ஓய்வுபெற்ற கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அளிக்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பேணி பாதுகாப்பதில் மனித உரிமை ஆணையம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

இதையும் படிங்க: மாநில மனித உரிமை ஆணையத்தலைவரின் பாதுகாப்பு இருமுறை வாபஸ் பெற்றது ஏன்?-அன்புமணி ராமதாஸ் கேள்வி!

அதே வேளையில் சமுகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனைகள், மனித உரிமை மீறல்களையும், அது தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கும் மிக சிறந்த அமைப்பாகவும் மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது. அத்தகைய அமைப்பில் தலைவராக இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பானது திடீரென திரும்ப பெறப்பட்டது. மிகப்பெரிய ஆபத்தான சூழலை உருவாக்குவதோடு, மனித உரிமை ஆணையத்தின் செயல்பாட்டையும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணைய தலைவருக்கு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதை தமிழக அரசு மறு பரிசீலனை செய்து மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என டிஜிபியிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.