ETV Bharat / snippets

பள்ளிக்கு வராமல் வேறு நபர் மூலம் பாடம் எடுத்த உதவி ஆசிரியர் சஸ்பெண்ட்!

காரிமங்கலம் போர்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆர்டர்
காரிமங்கலம் போர்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆர்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

தருமபுரி : தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், ராமிய பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கே.பாலாஜி. இவர் பள்ளிக்கு வராமல் வேறு ஒரு நபரை வைத்து பாடம் நடத்துவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் கடந்த ஆக 2ம் தேதியன்று நடைபெற்ற கல்வி மேலாண்மைக் குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில் பள்ளியின் உதவி ஆசிரியர் கே.பாலாஜி பள்ளிக்கு வருவதில்லை என தெரிய வந்தது. அதுமட்டுமின்றி பள்ளியில் பணிபுரிகின்ற பெண் ஆசிரியர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளி உதவி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் எழுந்ததன் அடிப்படையில், கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அரூர் தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் கொடுத்ததன் பேரில், உதவி ஆசிரியர் கே.பாலாஜியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.