ETV Bharat / state

"தவெக பி டீமாக தெரியவில்லை" - ஜி.கே.வாசன் கருத்து!

விஜய் தன்னுடைய கட்சி, அதன் கோட்பாடுகள், வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட முடியுமே தவிர, மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்துவதற்காக தன் கட்சியின் கோட்பாடுகளை கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

விஜய், ஜி.கே.வாசன்
விஜய், ஜி.கே.வாசன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தாமதமாக தொடங்கியுள்ளதால், பயிர்க் காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகை செலுத்துவதற்கான இறுதி தேதியை நவ.30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.

பயிர்க் கடன் வாங்க, பயிர்க் காப்பீடு செய்ய, நெல் அறுவடையின் போது கொள்முதல் நிலைத்திற்கு செல்ல 3 முறை அந்த பகுதியில் இருக்கின்ற கிராம அதிகாரியிடம் சிட்டா அடங்கல் வாங்க வேண்டிய கட்டாயத்தில் சிறு,குறு விவசாயிகள் உள்ளனர். இதனை ஒருமுறை வாங்கக் கூடிய சிட்டா அங்கல்- ஆக அனுமதிக்கக்கூடிய நிலையை உடனடியாக அரசு ஏற்படுத்த வேண்டும்.

ஜி .கே.வாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவை தண்ணீர் ஏற்கனவே பாக்கி இருக்கிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டுமோ அதனை உடனடியாக கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : "சீமான் கட்சியில் இருப்பவர்கள்தான் விஜய் கட்சிக்கு செல்வார்கள்".. எஸ்.வி.சேகர் கணிப்பு!

தவெக தலைவர் விஜய் தன்னுடைய புதிய கட்சி, அதன் கொள்கை, கோட்பாடுகள், வளர்ச்சி என்ற அடிப்படையில் செயல்பட முடியுமே தவிர மற்ற கட்சிகளை சந்தோஷப்படுத்துவதற்காக தன் கட்சியின் கோட்பாடுகளை கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அக்கட்சியின் வருங்கால செயல்பாடுகள், மக்கள் பணி இவற்றையெல்லாம் வைத்துதான் கணிக்க முடியும். பொறுத்திருந்து பார்ப்பது தான் விவேகமான அரசியலாக இருக்க முடியும்.

தமிழக வெற்றிக் கழகம் டெல்லியில் இருக்கக் கூடிய கட்சிக்கோ, தமிழகத்தில் இருக்கக்கூடிய கட்சிக்கோ பி டீம்-ஆக தெரியவில்லை. தன்னுடைய கட்சியை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட தொடங்கியுள்ளதாக தெரிகிறது" என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.