தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

தீபாவளியால் களைகட்டிய ஈரோடு ஆட்டுச் சந்தை.. 5 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனை!

புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை
புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 15 hours ago

ஈரோடு: ஈரோட்டில், புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்க வருகின்றனர்.

இன்று கூடிய சந்தைக்கு 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், 10 கிலோ கொண்ட ஆட்டு கிடாய் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால், ஆடுகள் விலை 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. மேலும், சந்தை துவங்கிய ஐந்து மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details