ETV Bharat / lifestyle

தீபாவளி எண்ணெய் குளியல்..காய்ச்சும் முறையும் பயன்படுத்தும் முறையும் இப்படி தான்!

தீபாவளி அன்று தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி? அதனை எவ்வாறு பாரம்பரிய முறையில் தயார் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 2 hours ago

தீபாவளி திருநாளில், விடியற்காலையில் எழுந்து, வீட்டில் உள்ள அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிப்பது சடங்கு. ஆனால், காலப்போக்கில் அனைத்தும் மாறிய நிலையில், எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையிலும் பல மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால், முறையாக எப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பது? அந்த எண்ணெய்யை எப்படி காய்ச்சுவது? இப்படி செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்...

  • சிலர் நல்லெண்ணைய் வாங்கி அப்படியே தலையில் தேய்த்து குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக, அடுப்பில் ஒரு இரும்பு சட்டியை வைத்து அதில் நல்லெண்ணையை ஊற்றவும்.
  • மிதமான தீயில் எண்ணெய் சூடானதும் சிறுது சீரகம், தோல் சீவி இடித்து வைத்த சிறு துண்டு இஞ்சி, இடித்து வைத்த 2 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும்
  • சூடு ஆறிய பின்னர், எண்ணெய்யை வடித்து தலையில் தேய்க்க வேண்டும்.

எண்ணெய் தேய்க்கும் முறை:

  • வீட்டில் உள்ள அனைவரும் காலை எழுந்து பல் துலக்கிய பின்னர் ஒரு இடத்தில் வரிசையாக அமர வேண்டும். வீட்டில் உள்ள மூத்தவர், நாம் காய்ச்சி வைத்திருக்கும் எண்ணெய்யை ஒரு கிண்ணத்திலும், மற்றொரு கிண்ணத்தில் சீயக்காய் பொடியை, வீட்டு பூஜை அறையில் உள்ள சுவாமி படத்திற்கு கீழ் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
  • பின்னர், அதை எடுத்து வந்து, அமர்ந்திருப்பவர்கள் முன்னால் தரையில் மூன்று சொட்டு நல்லெண்ணய்யும், சீயக்காய் பொடியையும் வைக்க வேண்டும். இப்படி செய்து, பூமி தாயை வணங்கிய பின்னர், தரையில் வைத்திருந்த எண்ணெய்யை வழித்து முதலில் அமர்ந்திருப்பவர் தலையில் கீழ் இருந்து மேலாக தேய்க்க வேண்டும். குறிப்பாக, இதனை வலது கையால் தான் செய்ய வேண்டும். (ஆரம்பத்தில் மட்டும், தரையில் வைத்தால் போதுமானது)
  • மூன்று முறை நல்லெண்ணையும், சீயக்காய் பொடியையும் தேய்த்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப நல்லெண்ணையை உடலில் தேய்க்கவும் செய்யலாம். அரை மணி நேரம் உடலில் எண்ணெய்யை நன்றாக ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

நலன்கள் என்னென்ன?:

  1. தீபாவளி அன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வம் வாசம் செய்யப்படுவதாக ஐதீகம்.
  2. தீபாவளி அன்று நாம் குளிக்கக்கூடிய சுடு நீரில் கங்கா தேவி வாசம் செய்வதாகவும், நல்லெண்ணையில் மகா லட்சுமியும், சீயக்காயில் சரஸ்வதி தேவியும், அன்றைக்கு நாம் சாப்பிடும் இனிப்பில் அமிர்தம் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
  3. புத்தாடையில் மகா விஷ்ணுவும் , சந்தனத்தில் பூமி மாதாவும், குங்குமத்தில் கெளரி தேவியும், மலர்களில் யோகிகளும், நெருப்பு பொறியில் ஜீவ ஆத்மா வாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் தான், தீபாவளி அன்று பட்டாசுகள் கொளுத்துகிறோம்.
  4. காலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளிப்பது, கங்கை நீரில் புனித நீராடுவதற்கு சமமாக பார்க்கப்படுகிறது. இதனால், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

எப்போதும் போல அதிரசம், முறுக்குன்னு இல்லாம இந்த தீபாவளிக்கு சுவையான ரசமலாய் செய்து அசத்துங்கள்!

மொறு மொறு தேங்காய் பால் முறுக்கை இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்...ரெசிபி இதோ!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit- ETVBharat TamilNadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.