கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் ராமோஜி ராவ்- நடிகர் விஜய் சேதுபதி! - VIJAY SETHUPATHI about Ramoji Rao - VIJAY SETHUPATHI ABOUT RAMOJI RAO
Published : Jun 9, 2024, 10:35 AM IST
|Updated : Jun 9, 2024, 11:01 AM IST
சென்னை: இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், பேஸன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மறைந்த ராமோஜி குழுமத்தின் நிறுவனர் ராமோஜி ராவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமோஜி ராவ்(87) நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "ராமோஜி ராவ் மரணம் ரொம்ப வருத்தமாக இருந்தது. எனக்கு அவருடன் நேரடி தொடர்பு இல்லை. புதுப்பேட்டை படத்திற்காக நான் அங்கு சென்றிருந்தேன். அவருடைய செட்டில் எல்லாமே இருக்கும். அவர் உயிரிழந்தது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்போது பெரிய பாரம் இல்லாததால் எங்குப் படுத்தாலும் தூங்கி விடுவேன்.
அப்படி நிறைய இடங்களில் தூங்கி இருக்கேன். நிறைய ஷூட்டிங் பார்த்திருக்கிறேன். ஒரு படத்தில் நிறைய அனுபவங்கள் எனக்கு அங்கிருந்தது. அவரது மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது. நிறைய பேருடைய கற்பனைக்கு உருவம் கொடுத்தவரது ஆத்மா சாந்தியடையட்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: சினிமா, மீடியா உலகின் ஜாம்பவான் ராமோஜி ராவ்.. கலையுலக வித்தகராக உருவான வரலாறு! - Ramoji Rao history