அரியலூர் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு; ஒருவர் மாயம்! - கொள்ளிடம் ஆறு
Published : Feb 26, 2024, 10:21 AM IST
அரியலூர்: சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் என 9 பேர் தஞ்சாவூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பிச் செல்லும் போது அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது சந்தான கிருஷ்ணன், பச்சையப்பன், தீபக் ஆகியோர் ஆற்றின் சுழலில் சிக்கியுள்ளனர்.
அவர்களைக் காப்பாற்ற மற்ற மாணவர்கள் முயற்சித்தும் முடியாத நிலையில், அருகில் இருந்த பொதுமக்கள் மற்ற ஆறு இளைஞர்களைப் பத்திரமாக மீட்டனர். தண்ணீரில் மாயமான சந்தானம், பச்சையப்பன், தீனதயாளன் ஆகிய மூன்று இளைஞர்களைப் பொதுமக்களின் துணையுடன் தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தீயணைப்புத் துறையினரின் தீவிர தேடுதல் முயற்சியில் கொள்ளிடத்தில் கரை ஓரமாக ஒதுங்கியிருந்த இரண்டு இளைஞர்களின் உடல்களைச் மீட்டனர். இதனையடுத்து அந்த இரண்டு இளைஞர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மாயமான மேலும் ஒரு இளைஞரைத் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.