ராயன் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி.. அம்பத்தூரில் நடந்தது என்ன? - ambattur bike theft - AMBATTUR BIKE THEFT
Published : Jul 31, 2024, 4:12 PM IST
சென்னை: அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மேலும், இவருடைய நண்பராகிய டில்லி என்பவரும் இதே பகுதியில் வசித்து வருகிறார். இருவரும் சமீபத்தில் வெளியாகிய தனுஷ் நடித்துள்ள ராயன் படத்திற்கு தனித்தனி R15 வாகனத்தில் சென்றுள்ளனர்.
படம் முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள், அவரவர் தங்கள் வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர். சற்று நேரத்தில் மீண்டும் வெளியில் வந்து பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இளைஞர் ஒருவர் அசால்டாக வந்து கள்ளச் சாவி போட்டு பைக்கை தள்ளிக் கொண்டு செல்வது பதிவாகி உள்ளது. இதே போன்று மற்றொரு வாகனத்தை டோ செய்து திருடிச் செல்வது தெரியவந்தது.
இதனை அடுத்து, நண்பர்கள் இருவரும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.