விஜய்க்காக மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் தங்க தேர் இழுத்த தவெக பெண் நிர்வாகிகள்!
Published : 16 hours ago
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவரும், நடிகருமான விஜய் திரைத்துறைக்கு வந்து 32 ஆண்டுகள் முடிந்து 33ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதனைக் கொண்டாடும் விதமாக, தவெக சென்னை புறநகர் மாவட்ட மகளிர் அணி பவித்ரா தமிழரசன் ஏற்பாட்டில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் தங்க தேரை வடம் பிடித்து இழுத்து, கோயிலைச் சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு பசியோடு பசுமாடு ஒன்று வந்தது. அதனை விரட்டாமல் கருணையோடு பசுமாட்டிற்கு உணவளித்த நிகழ்ச்சி, அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது நடிகர் விஜய், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கேவிஎன் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. தளபதி 69 படப்பிடிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.