கொடைக்கானலில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.. துர்கா ஸ்டாலின்! - Durga Stalin boat ride Kodaikanal - DURGA STALIN BOAT RIDE KODAIKANAL
Published : May 1, 2024, 10:57 PM IST
திண்டுக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், இன்று (மே 1) மாலை கொடைக்கானல் ஏரியில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் படகு சவாரி செய்தார். படகு சவாரி செய்து முடித்த பின்னர் படகு குளத்திற்கு வெளியே காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் உடன் செல்வி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி செய்ய இருந்த நிலையில் சில காரணங்களுக்காக அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. கொடைக்கானல் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழும் நேரம் முடிந்த பின்னர் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் படகு சவாரி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் தங்கி இருப்பதால் அப்பகுதி போக்குவரத்தைப் பொறுத்த வரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் போக்குவதைச் சீர் செய்து வருகின்றனர்.