நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை! - Elephant Deivanai bath - ELEPHANT DEIVANAI BATH
Published : Jul 31, 2024, 12:49 PM IST
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்கோவிலுக்குச் சொந்தமான தெய்வானை என்ற யானை உள்ளது. 26 வயது நிரம்பிய இந்த தெய்வானை யானையைக் குளிக்க வைப்பதற்காகச் சரவணப் பொய்கையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஐந்தரை அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நீச்சல் குளத்தில் ஷவர் பாத் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்செந்தூர் பகுதி கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழலில் இருந்த நிலையில், அப்போது சரவணப் பொய்கையில் தெய்வானை யானை குளிப்பதற்காக வந்தது. சரவணப் பொய்கையில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கிய யானை அங்கு உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தது.
தன்னுடைய தும்பிக்கை மூலம் தண்ணீரை பீச்சியடித்து உடலைக் குளிர வைத்து விளையாடியது. அதனைத்தொடர்ந்து ஷவர் மேல் உள்ள மேடையில் கால் வைத்து விளையாடி மகிழ்ந்தது. மேலும், நீச்சல் குளத்தில் உள்ள ஷவரில் குளித்த தெய்வானை யானை தனது பாகனுடன் கொஞ்சி விளையாடியது. இதை அந்த வழியாகச் சென்ற பக்தர்கள் பார்த்து கண்டு ரசித்தனர்.