கனிவகை அலங்காரத்தில் தஞ்சை வாராஹி அம்மன்! - Varahi Amman in fruit alangaram - VARAHI AMMAN IN FRUIT ALANGARAM
Published : Jul 13, 2024, 7:05 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார். இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 21வது ஆஷாட நவராத்திரி விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி துவங்கிய நிலையில், ஜூலை 14 ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.
இந்நிலையில், 10 நாட்கள் நடக்க இருக்கும் இந்த விழாவின் 9ஆம் நாளான இன்று (ஜூலை 13) அம்மனுக்கு கனி வகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஆப்பிள், மாதுளை, கொய்யா, வாழைப்பழம், ஆரஞ்ச், தர்பூசணி, சாத்துக்குடி, திராட்சை, பலாப்பழம் உள்ளிட்ட கனிவகைகள் இடம்பெற்ற நிலையில், அம்மனை சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை சிறப்பு தரிசனம் செய்தனர்.