தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Live: தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதம்..நேரலை - TN Assembly 2024 session - TN ASSEMBLY 2024 SESSION

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 9:58 AM IST

Updated : Jun 26, 2024, 4:57 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  இன்று (ஜூன் 26) சட்டப்பேரவையில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதனை நேரலையில் காணலாம்.இதையடுத்து திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, நீர்வளத்துறை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை உள்ளிட்டவைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.  மேலும், இந்த விவாதத்தில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பதிலுரை நிகழ்த்த உள்ளனர். அதன் பின்னர், துறை ரீதியிலான பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.அதற்கு முன்னதாக கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதிலளித்து விளக்கம் அளிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை மாலை 5 மணிக்கு கூட உள்ளது.  இதில் சுற்றுலா, கலை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்டவைகளில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தினங்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கருப்பு சட்டையுடன் வந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய உயிரிழப்புகள் குறித்து பேச அனுமதி கோரிய நிலையில், இன்றும் கருப்பு சட்டையுடன் வந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர், சபையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
Last Updated : Jun 26, 2024, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details