தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 10:02 AM IST

Updated : Jun 24, 2024, 12:08 PM IST

ETV Bharat / videos

LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதம் நேரலை - TAMIL NADU ASSEMBLY

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான அதிமுக, இந்த விவகாரம் குறித்து பேச மறுப்பதாக கூறி முந்தைய நாட்களில் சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்தது.இதனிடையே, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை உள்ளிட்டவைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதை நேரலையில் காணலாம்.மேலும், இந்த விவாதத்தில் சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்த பின்னர் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் பதிலுரை நிகழ்த்த உள்ளனர். அதன் பின்னர், துறை ரீதியிலான பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.அதற்கு முன்னதாக கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் உரிய பதிலளித்து விளக்கம் அளிக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து இன்றைய நாளின் இரண்டாவது அமர்வு மாலை 5 மணிக்கு கூட உள்ளது. 
Last Updated : Jun 24, 2024, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details