தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கொட்டும் மழையில் ஆட்டம் போடும் சிறுவர்கள்! வைரலாகும் வீடியோ - CHILDREN DANCE IN RAIN VIDEO - CHILDREN DANCE IN RAIN VIDEO

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 8:04 PM IST

தூத்துக்குடி: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில், வெயில் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மதிய பொழுதுக்குமேல் இடியுடன்கூடிய மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வெயிலின் கடும் தாக்கத்தால் அவதி அடைந்துவந்த வேளையில், இந்த திடீர் மழை அவர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. 

இதில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறுவர்கள் கூட்டமாக மகிழ்ச்சியுடன் மழையில் குத்தாட்டம் போட்டும், கிரிக்கெட் விளையாடியும், கண்ணாமூச்சி விளையாடியும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். மேலும் இந்த மழையால் விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பல நாட்களுக்கு பின் பெய்த இந்த மழையால் மக்கள் பெரு மகிழச்சியடைந்தனர். அதுமட்டுமின்றி இந்த மழையின் அழகு பலரது மனச்சோர்வை போக்கியதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details