தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டி! - SILAMBAM COMPETITION

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 8:04 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் தமிழ்நாடு சிலம்பம் சங்கமும், மாவட்ட சிலம்பம் சங்கமும் இணைந்து மாநில அளவிலான சிலம்பம் போட்டியை இன்று நடத்தினர். 

இந்தப் போட்டியை அகில சிலம்பம் சங்கத் தலைவர் சந்தோஷ்குமார் துவங்கி வைத்தார். விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “இந்தப் போட்டி தமிழகத்தில் மாநில அளவிலான போட்டியாகும். ஏற்கனவே இதில் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றவர்கள் இன்றைய மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். அவர்கள் மட்டுமே இன்று இந்த போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 வயது முதல் 19 வயது வரை, ஆண்கள், பெண்கள் என தனிதனியாக 14 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது” என்றார். மேலும் இந்த போட்டியில் பயிற்சியாளர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

ABOUT THE AUTHOR

...view details