தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து! - Actor Rajinikanth
Published : Feb 6, 2024, 3:40 PM IST
|Updated : Feb 11, 2024, 1:08 PM IST
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் நடிகர் விஜய், இயக்குநர் வெட்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப். 2ஆம் தேதி, தான் துவங்கிய தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஒப்புக் கொண்ட படங்களை முடித்த பின், முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே இலக்கு எனவும் அறிவித்திருந்தார்.
பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய், அரசியல் கட்சி துவங்கியதை தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்களும் நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். அப்போது, விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “அவருக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துச் சென்றார். இது குறித்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.