ETV Bharat / state

"பெரியார் ஒழிக என்பதல்ல... பிரபாகரன் வாழ்க என்பதே எனது கோட்பாடு..." சீமான் பரபரப்புப் பேட்டி! - SEEMAN RESPONDS

பெரியார் ஒழிக என்பதல்ல... பிரபாகரன் வாழ்க என்பதே எனது கோட்பாடு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2025, 3:02 PM IST

Updated : Jan 24, 2025, 3:15 PM IST

கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய சீமான், "திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாம் தமிழர்தான் வளர்க்க வேண்டி இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து திமுக பிறக்க காரணம் என்ன என்பதை ஏற்கனவே துரைமுருகன் சொல்லியிருக்கிறார். கருணாநிதி பெரியாரை விமர்சித்து பேசியதில் நாங்கள் துளிஅளவு கூட விமர்சித்து பேசவில்லை.

பிரபாகரனை சந்திக்கவில்லை: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. லட்சிய உறவு மட்டுமே. லட்சிய உறவுக்கு போராடி செத்தவர்களும் , நாங்களும் தான் அவருக்கு ரத்த உறவுகள். கார்த்திக் மனோகர் சொல்லுவதற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் சொல்வார்கள். நான் பிரபாகரனையே சந்திக்கவில்லை என்று சொல்கிறேன். ஒருவர் எட்டு நிமிடம் சந்தித்ததாக சொல்கிறார். ஒருவர் பத்து நிமிடம் என்று சொல்கிறார். ஒருவர் இந்த படம் பொய் என்கிறார்.

சந்தித்தது உண்மையா? படம் பொய்யா? நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன். எதை நீங்கள் நம்புகின்றீர்கள்?பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை ஏன் ஆய்வுக்கு உட்படுத்த முன்வரவில்லை என்ற கேள்விக்கு, அதை யாருக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது? நான் தான் சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேனே. இப்படி பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு நான் ஏன் நிரூபிக்க வேண்டும்? நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. தேவை என்றால் தானே நிருபிக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் நானே இல்லை என்கின்றேன். பிரபாகரனை சந்திக்கவே இல்லை என்று சொல்கிறேன்..திரும்ப திரும்ப ஏன் கேட்கின்றீர்கள்?

தன்னெழுச்சியாக நடந்த போராட்டம்: நீலாங்கரை வீட்டில் உருட்டு கட்டைகளுடன் தொண்டர்கள் இருந்ததற்கு காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி வெடிகுண்டு இருந்ததற்கு ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை? அதையும் சேர்த்து வழக்கு போட சொல்லுங்கள். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படும் என்பது தெரியும். நாம் தமிழர் என்ற புரட்சி படை இருக்கும் வரை ஒரு படி மண்ணைக் கூட எடுக்க முடியாது. இது தன்னெழுச்சியாக நடந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

பாஜக இதனை தடுத்து நிறுத்தியது என்றால், அதை கொண்டு வந்தது யார்? ஏலம் விடும்பொழுது திமுக மவுனமாக இருந்தது ஏன் ? இது மக்களின் தன்னெழுச்சி, கிளர்ச்சியான, புரட்சிகர போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரியார் என்னென்ன பேசினார் என்பதை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில், திமுகவினர் பேச வேண்டும். கடவுளை கற்பித்தவன் காட்டுமிராண்டி, தமிழ் ஒரு சனியன் என பெரியார் பேசியது அனைத்தையும் துணிவு மிக்க பெரியார் பெருந்தொண்டர்கள், வழிபாட்டாளர்கள் அங்கு வந்து பேச வேண்டும். சீமான் பெரியாரை இழிவாக பேசிவிட்டார் அதனால் அவருக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பேச வேண்டும். பெரியாரைப் பற்றி பேசி ஓட்டு கேட்க வேண்டும்.

பெரியாரை எதிர்த்து தானே கட்சி ஆரம்பித்தார்கள். எந்த இடத்தில் திமுகவிற்கு கொள்கை இருக்கிறது? எனக்கு எதிரான போராட்டத்தில் 32 இயக்கங்கள் சேர்ந்து 150 பேரைக் கூட திரட்ட முடியவில்லை. உங்களால் என் ஒருவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆரிய எதிர்ப்பு என்கின்றீர்கள். பிரசாந்த் கிஷோரை ஏன் கூட்டி வந்தீர்கள்? அவரை விட 20 மடங்கு அறிவாளி ரங்கராஜ் பாண்டே. தமிரழ்நாட்டை பற்றி நன்றாக தெரியும். அவரை ஏன் தேர்தல் வியூக வகுப்பாளராக வைக்கவில்லை? இப்பொழுது ராபின் சர்மா என்று ஒருவரை வைத்திருக்கிறீர்கள். அவரும் ஆரியன் தான். பாண்டேவுக்கு இவை தெரியும். இவர்களை வைத்து ஒரு முறை தேர்தல் சந்திக்க வேண்டியது தானே?

உ.வே.சா. பெயரை ஏன் வைக்கவில்லை?: எஸ்.வி.சேகர் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். எஸ் வி சேகர் அப்பாவின் பெயரை எதற்கு தெருவிற்கு வைக்கின்றீர்கள்? தமிழ் இலக்கியத்தை சேகரித்து வைத்திருந்த உ.வே.சாமிநாதய்யர் பெயரை வைக்கலாம். மறைமலை அடிகளாக குரு பரிதிமாற் கலைஞர் பெயரை வைக்கலாம். பாரதியின் பெயர் வைக்கலாம். எஸ் வி சேகரின் அப்பா பெயரை வைப்பது ஏன் ? எஸ்.வி.சேகர் ஓட்டு கேட்டால் அவர் தெருவில் வாழும் பிராமணர்கள் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள். உளவுத்துறையை மாற்றி நல்ல அதிகாரிகளை போடுங்கள்.

பிரபாகரனை நாங்கள் தமிழ் தேசியத்தின் எழுச்சியாக, அடையாளமாக பார்க்கிறோம். திராவிடத்தின் குறியீடு பெரியார். தமிழ் தேசியத்தின் பெரும் குறியீடு பிரபாகரன். அதனால் இரண்டும் தான் மோத வேண்டும். புலிகள் கேட்டது திராவிட ஈழமா? தனி தமிழ் ஈழமா? நான் தமிழனா? திராவிடனா? தமிழ் தமிழர் தமிழர் அரசு என பேசுவது திராவிட எழுசிக்கு எதிரானது என்கின்றார் பெரியார். ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் இங்கே ஒரு லட்சம் பிரச்னைகள் இருக்கின்றன.

2 நிமிடம் பெரியாரை பற்றி பேசமுடியுமா?: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற எங்களை அனுமதிக்காதது ஏன்? பாமக, பாஜகவுக்கு அனுமதி மறுத்தது ஏன்? பெரியார்தான் எல்லா நோய்க்கும் மருந்து என்று சொல்லும் பொழுது, ஒற்றைக் குறியீடாக நிறுத்தும் பொழுது அதை உடைக்க வேண்டி இருக்கிறது. பெரியாரும் போராடினார். பெரியார் மட்டும் தான் போராடினார் என்பதை ஏற்கவில்லை. திரும்பத் திரும்ப பெரியாரை நிறுவ முயலும் போது, அதை உடைக்க வேண்டி இருக்கிறது.

என்னை எதிர்த்து போராடுகிறோம். முற்றுகை இடுகிறோம் என வருகிறீர்கள். பேசாமல் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், நானும் போய் இருப்பேன். பெரியார் ஒழிக என்பதல்ல என் கோட்பாடு. பிரபாகரன் வாழ்க என்பது எனது கோட்பாடு. இந்தி ஒழிக அல்ல எனது கோட்பாடு.தமிழ் வாழ்க என்பதே என் கோட்பாடு. திமுகவில் சேர்ந்த யாராவது ஒருவரை இரண்டு நிமிடம் பெரியாரை பற்றி பேசச் சொல்லுங்கள். பெரியார் யார் என்று ஒரு ஐந்து நிமிடம் பேச சொல்லுங்கள். முதல்வரையும், துணை முதல்வரையும் 10 நிமிடம் எழுதி வைக்காமல் பெரியாரைப் பேசச் சொல்லுங்கள். பொதுத்தளத்தில் என் தலைவர் பிரபாகரனை பேசி ஓட்டு கேட்கிறேன். பெரியாரைப் பேசி ஓட்டு கேளுங்கள் பார்க்கலாம். சூரியன் உதித்தால் தான் உலகத்திற்கு விடிவு. ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு,"என்றார்.

Last Updated : Jan 24, 2025, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.