Live: 'இந்தியா கூட்டணி' கொங்கு மண்டல வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை! - Coimbatore Rahul Gandhi Campaign - COIMBATORE RAHUL GANDHI CAMPAIGN
Published : Apr 12, 2024, 4:11 PM IST
|Updated : Apr 12, 2024, 8:32 PM IST
கோயம்புத்தூர்: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார்.இதற்காக அவர் மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை தனியார்ப் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள பிரச்சார பொதுக்கூட்ட மேடைக்கு காரில் வந்தார். அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களைப் பார்த்து ராகுல்காந்தி கையசைத்தார்.அதன்பின் மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல் காந்தி கோவை புறப்பட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். செட்டிபாளையத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி உரை நிகழ்த்தி வருகின்றனர். அதன் நேரடி காட்சிகளை காணலாம்...பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸ் (திருநெல்வேலி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), கனிமொழி (தூத்துக்குடி), விஜய் வசந்த் (கன்னியாகுமரி), கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), நவாஸ்கனி (இராமநாதபுரம்) ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கிறார். மாநில காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.இதையும் படிங்க: அடேங்கப்பா! திருநெல்வேலியில் இதுவரை ரூ.2 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்! - Election Flying Squad Raid
Last Updated : Apr 12, 2024, 8:32 PM IST