தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சாலையில் வீணாக ஓடும் குடிநீர் மாலை அணிவித்து, மலர் தூவி எதிர்ப்பைத் தெரிவித்த பொதுமக்கள்.. வைரலான வீடியோ! - tenkasi road water issue - TENKASI ROAD WATER ISSUE

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 5:32 PM IST

தென்காசி: குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகச் செல்வதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல, நூதன முறையில் சாலையில் வந்த தண்ணீருக்கு மாலை அணிவித்து, மலர் தூவி பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டம், கடையம் பகுதி வழியாகச் செல்லும் கனரக வாகனங்களின் விளைவாகச் சாலையின் அடிப்பகுதிகளில் போடப்பட்ட குடிநீர் குழாய் உடைபட்டு தண்ணீர் சாலையில் வீணாகச் சென்றுள்ளது.

இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமையில், சமூக ஆர்வலர் கஜேந்திரன், கடையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம் உள்ளிட்ட பொதுமக்கள், உடைப்பு ஏற்பட்டு சாலையில் வந்த தண்ணீருக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ தற்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details