தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திருவண்ணாமலை கூத்தாண்டவர் கோயில் திருவிழா: பூக்கரகம் எடுத்து பக்தர்கள் வழிபாடு! - Koothandavar Temple festival - KOOTHANDAVAR TEMPLE FESTIVAL

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 12:35 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது கூத்தாண்டவர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும்  கூத்தாண்டவர் திருவிழா 20 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையியில் 202-ஆம் ஆண்டு தேர் திருவிழாவை கூத்தாண்டவர் ஆலயத்தி கடந்த மாதம் தொடங்கியது. 
திருவிழாவை முன்னிட்டு பூ கரகம் சோடித்து சாமி மாடவீதி வழியாக ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகாபாரதம் இன்னிசை சொற்பொழிவுகள், பாஞ்சாலி திருமணம், வானவேடிக்கை, கரகாட்டம், கூத்தாண்டவர் பிறப்பு, பெண்கள் தங்கள் வேண்டுதல், பொங்கல் வைத்து மாட வீதி வழியாக ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தல், பெண் அழைப்பு நிகழ்ச்சி திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி மற்றும் அழகிப் போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 20-வது நாள் 'கூத்தாண்டவர் தேர் திருவிழா' மிக விமரிசையாக நடைபெறும். இதில் ஏராளமான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

...view details